தமிழ்நாட்டின் கல்விப்பாட்டு முயற்சிக்கு ஒரு கேட்பு மந்திரம்.
தமிழர் கொண்டாடி இருக்க வேண்டிய சீரிய வாழ்மானத்திற்கான கல்வி குறித்தும், நடப்பில் பேரளவு தமிழர் முன்னெடுத்து வரும் சீரற்ற பிழைப்பிற்கான நிர்வாகம் குறித்தும் பேசுவதற்கனாது இந்தக் கட்டுரை.
காட்டிற்குள் பிறக்கிற ஒரு நாய்க்குட்டி தாயுடனும் உடன் விலங்குகளுடனும் ஓடியாடிக் கற்பது சீரிய வாழ்மானத்திற்கான கல்வியாகும்.
வீட்டில் வளர்கிற ஒரு நாய்க்குட்டி உரிமையாளருடனும், உரிமையாளரின் தலைவி பிள்ளைகளுடனும், உரிமையாளரின் சொந்த பந்தங்கள் நட்புக்களுடனும், வெளியாட்களுடனும் அது நடந்து கொள்ள வேண்டிய முறைகளை உரிமையாளின் மொழியில் பயில்வது சீரற்ற பிழைப்பிற்கான நிர்வாகமாகும்.
ஒரு தமிழ்ப்பிள்ளை தாயின் மடியிலும், தந்தையின் தோளிலும், அண்ணன் அக்காவின் கைகளிலும், அண்டை அயலாரின் தொடர்புகளிலும், பள்ளியில் தமிழ்வழிக் கல்வியிலும் கற்பது சீரிய வாழ்மானத்திற்கான கல்வியாகும்.
அந்தப் பிள்ளையால் தனித்திறனிலோ, வேளாண்மையிலோ, தொழிலிலோ, வணிகத்திலோ சிறக்க முடியும். அந்தப் பிள்ளை உடலுழைப்புக் கூலித்தளத்திற்கான அல்லது நிர்வாகக் கூலித்தளத்திற்கான வேலையை விரும்பாது.
ஒரு தமிழ்ப்பிள்ளை மம்மி, டாடி, பிரதர், சிஸ்டர், ஆண்டி அங்கிள் என்கிற அண்டை அயலார் அனைவரின் தொடர்புகளிலும், அரசுப்பள்ளி- ஆனால் ஆங்கிலவழி, மெட்ரிக் பள்ளி, ஒன்றியப் பள்ளி, இன்டர் நேசனல் பள்ளி என்கிற நிறுவனங்களில் பயில்வது நிர்வாகம் மட்டுமே ஆகும். அது ஒருபோதும் கல்வியாகாது.
அந்தப் பிள்ளையால் தனித்திறனிலோ, வேளாண்மையிலோ, தொழிலிலோ, வணிகத்திலோ சிறக்க முடியாது. அந்தப் பிள்ளை உடலுழைப்புக் கூலித்தளத்திற்கான வேலையை விரும்பாது.
அந்தப் பிள்ளை நிர்வாகக் கூலித்தளத்திற்கான வேலையை உலகளாவி தேடிப்பெறும்.
அந்தப் பிள்ளையால் மிகப் பெரும் பொருளாதாரத்துடன் பிழைக்க முடியும். ஆனால்அதன் குடும்ப- சமுக- அரசியல் அதிகாரத்தில்- தொடர்ச்சியைக் கொணர முடியாது.
பல ஆயிரம் ஆண்டுகளாக பேரளவு தமிழர் சீரற்ற பிழைப்பிற்கான நிர்வாகத்தை பயின்று வருவதாலேயே சுந்தர் பிச்சை உருவாக முடிகிறதே அன்றி அதானி உருவாக முடியவில்லை.
தமிழர் மட்டுமே வாழ்ந்த, தமிழ் ஆட்சி அதிகாரம் புரிந்த, அயலவரால் ஒலிக்க முடியாத காரணம் பற்றி ந்தேயா (இந்தியா) ஆகிப்போன, நாவலந்தேயத்தை முற்றாக இழந்து, வெறுமனே நிர்வாகத்திற்கான மாநிலத்தை தமிழ்நாடு தமிழில் சொன்னாலும், ஆங்கிலத்தில் டமில்நாடு என்று அடையாளப்படுத்தி, திராவிடம் என்கிற சமஸ்கிருதத் தலைப்பில் உலாவரும் கட்சிகளை பெற்று நிர்வகித்து வருகிறோம்.
ஆட்சி அதிகாரத்திற்கான ஒட்டுமொத்த நாவலந்தேய மண்ணையும் மீட்டெடுக்க கல்வியால் மட்டுமே முடியும்! தமிழர் பேரளவாக முயல்வோமா?
தமிழ்நாட்டின் கல்விப்பாட்டு முயற்சியில் கடவுளின் முயக்கம் வேண்டி, ஐந்திணைக் கோயில் கட்டியுள்ள இந்த கல்விப்பாட்டு மந்திரத்தை, ஆர்வம் உள்ளவர்கள் அன்றாடம் ஓதிவந்தால், தமிழ்நாட்டின் கல்விப்பாட்டு முயற்சிக்காக- தமிழ்மக்களையும், தமிழ்ச்சான்றோர் பெருமக்களையும், தமிழ்நாட்டு ஆட்சியாளர்களையும், கல்வி சார்ந்த நிறுவனங்களையும், ஒன்றிய ஆட்சியாளர்களையும், கடவுள் கட்டாயம் பேரளவாக முயக்கும்.
கருத்துகள்
கருத்துரையிடுக