கடவுள்! எங்கே, எப்போது, ஏன், உருவாகிறது? இயல்கணக்கில் தமிழியல் தெளிவுபடுத்துவது என்ன
தமிழியல் என்பது தமிழர்தம் கோட்பாடும் நடைமுறையுமான இயல் ஆகும்.
இயல் என்றால் இயக்கம் என்கிற நடைமுறையும், கோட்பாடு என்கிற இயமும் ஆகும்.
இயல் உடையது இயற்கை. அதாவது கோட்பாடும் நடைமுறையும் உரியது இயற்கை.
இயற்கையின் கோட்பாடு நடைமுறைகளை அறிவது இயல்அறிவு (சயின்ஸ்) இயற்கையின் வளர்சிதை மாற்றத்தை- தொடர்பு மற்றும் முயற்சிகளைப் பொருத்தி கணிப்பது இயல்கணக்கு. இயல்கணக்கை தமிழினம் மட்டுமே கொண்டுள்ளது. உலகினர் கொண்டிருக்கவில்லை.
இயல்கணிப்பில் தமிழ்முன்னோரால் உருவாக்கப்பட்ட மூன்று முன்னேற்றக்கலைகள் 1.நிமித்தகம் 2.கணியம் 3.மந்திரம்.
கடவுள் என்பது என்ன? முதலெனப்படுவது இடமும் காலமும் என்று தமிழ்முன்னோர் நிறுவியுள்ளனர். அதில் எல்லையும் இயக்கமும் இல்லாத இடம் கடவுளாக காலத்தால் உருவாக்கப்படுகிறது.
காலம் என்பது என்ன? குறிப்பிட்ட எண்ணிக்கையோடு, சொந்த இயக்கத்தோடு, குறிப்பிட்ட எல்லையோடு இடத்தில் உலா வருகிற அடிப்படையும் நுட்பமும் ஆன தனிஒன்றுகளே காலம் ஆகும்.
தனிஒன்றுகள், தனித்தனியாக இயங்கி வரும்போது இடம் தனிஒன்றுகளுக்குக் கடந்து மட்டும் அமைகிறது.
இரண்டு தனிஒன்றுகள் பொருந்து முக எதிரியக்கம் காரணமாக ஒன்றித்து இயங்கும் போது கடந்து மட்டும் அமைந்த இடம் உள்ளேயும் அமைகிறது.
பொருந்துமுக எதிர்இயக்கத்தால் இரண்டு ஒன்றுகள் முறுக்கிக் கொண்டு ஒற்றையாக இயங்கும். இதை கயிறு திரித்தல் நடைமுறையோடு நாம் பொருத்தி உணர முடியும்.
கட + உள் = கடவுள், இங்கேதான் உருவாகிறது. இயக்கம் இல்லாமல் கடந்து மட்டும் இருந்த இடம் இரண்டு தனிஒன்றுகளுக்கு இடையே உள்ளாக அமைந்ததும் அந்த இரண்டுகளால் இயக்கம் பெற்ற கட என்கிற வெளி- விண்வெளி அல்லது கடவுள் ஆகிறது.
கடவுள்- அந்த இரண்டின் இயல்புக்கு அதை முயக்கும் விசும்பு என்கிற மூன்றாவது நிலையை எய்துகிறது.
தனி ஒன்றுகள் அனைத்திற்கும் உழைப்பு என்கிற இயல்பு மட்டுமே இருந்த நிலையில்- இரண்டாவது உருவான நிலையில்- மேலாண்மை என்கிற புதிய இயல்பு வருகிறது.
ஆக எண்ணிக்கையே இயல்பு என்றும், எண்ணிக்கை மாற்றமே இயல்புமாற்றம் என்றும் புரிந்து கொள்ள முடிகிறது.
உலகினரின் தனிமப்பட்டியலும் இந்த அடிப்டையைக் கொண்டிருப்பதை பொருத்தி எண்ணிக்கை மாற்றமே இயல்பு மாற்றம் என்று உறுதிப்படுத்தலாம்.
இந்த இயல்பு மாற்றத்தின் அடிப்படையில் இயற்கையின் வளர்சிதை மாற்றத்தை தொடர்பு முயற்சிகளைப் பொருத்தி கணிக்க தமிழ்முன்னோர் முன்னெடுத்த இரண்டாவது முன்னேற்றக்கலைதான் கணியம்.
தனிஒன்றுகள் பொருந்துமுக எதிரியக்கம் காரணமாக, வேறுவேறு கூட்டமாக உருவாகி, நான்கு வகையான ஆற்றல் மூலங்கள் உருவாகின்றன. எண்ணிக்கை மாற்றமே இயல்பு மாற்றத்திற்கு அடிப்படை என்கிற பொருத்தத்தில் அவைகள் வேறுவேறு இயல்புகளைக் கொண்டுள்ளன.
அந்த நான்கு ஆற்றல் மூலங்கள் 1.நிலம் 2.நீர் 3.தீ 4.காற்று என்பன.
இந்த நான்கும் வெளியில் (இடத்தில்) இறைந்து கிடப்பதால் இவற்றை இறை என்கிற ஆற்றல் மூலமாக நிறுவினர் தமிழ்முன்னோர்.
தமிழ் முன்னோர் நிறுவிய இரண்டு ஆற்றல் மூலங்கள் 1.கடவுள் 2.இறை.
தமிழ்முன்னோர் நிறுவியுள்ள முதலெனப்படுவது இடமும் காலமும் என்பதில்- இடம் என்பது விசும்பு என்கிற திரம், அது கடவுள் என்றும் பேசப்படுகிறது. காலம் என்பது அடிப்படையில் தனிஒன்றுகள், வழிநிலையில் நிலம், நீர், தீ, காற்று என்கிற நாற்திரம், அது இறை என்றும் பேசப்படுகிறது.
கடவுளும், இறையும் பல்வேறு உருவாக்கங்களில் தொய்ந்திருக்கிற காரணம் பற்றி, நம்மால் உருவாக்கப் பட்டது எல்லாம் கடவுள் கூறு. கடவுள் நம்மால் உருவாக்கப்படுகிறது என்பதை முன்பே விளக்கிவிட்டோம்.
நம் உருவாக்கத்தில் பங்கு வகிப்பது எல்லாம் இறை கூறு. எண்ணிக்கை மாற்றமே இயல்பு மாற்றம் என்கிற அடிப்படையில் பல்வேறு கூட்டு இயக்கங்களாக இறையில் இருந்தே இயற்கையின் அனைத்தும் உருவாகின்றன. என்பதையும் முன்பே விளக்கிவிட்டோம்.
கடவுள் கூறையும், இறைக் கூறையும் தெய்வமாக வழிபடுவது தமிழர் மரபு.
கடவுள் ஒன்றே ஒன்று. இறை நான்கு. அவற்றின் கூறுகளாக அமைந்த தெய்வங்கள் பற்பல.
ஐந்திரம் என்ற பொருள்பொதிந்த சொல்லில் தமிழர் நிறுவிய ஐந்து திரங்கள் இந்தக் கடவுளும் இறையும்.
கடவுளும் இறையும் ஆற்றல் மூலங்கள். தெய்வம் வழிபாட்டு மூலம்.
உலகினருக்கு இடுகுறியான வழிபாட்டு மூலங்கள் மட்டுமே உண்டு. தமிழினத்திற்கு ஆற்றல்மூலமும், அந்த ஆற்றல் முலத்தின் புரிதலோடு ஆன வழிபாட்டு மூலமும் உண்டு.
கடவுள் இறை என்கிற இரண்டும் பொருள் பொதிந்த தமிழ்ச்சொற்கள் மட்டுமே இந்த இரண்டு சொற்களில் பொதிக்கப்பட்ட பொருளில் உலகில் எந்த மொழியும் எந்தச் சொற்களையும் கொண்டிருக்கவில்லை.
உலகினரின் எந்த இடுகுறி தெய்வத்தையும் கடவுள் என்றோ இறை என்றோ சுட்டுவதோ, அதை இடுகுறிதான்- காரணம் அல்ல என்று மறுப்பதற்கு கடவுள் இல்லை என்று முன்னெடுப்பதோ நூறு விழுக்காடு பிழை ஆகும்.
தெய்வம்: 1.கடவுள்கூறுதெய்வம் 2.இறைக்கூறு தெய்வம் 3.குலதெய்வம் என்று மூன்று வகைப்படும்.
ஆண்டுக்கு ஒருமுறை தெவம் கொண்டாடி குலதெய்வத்திற்கு விழா எடுப்பதும்,
கார்த்திகை மாதத்தில் விளக்கேற்றுத் திருவிழா என்று நெருப்புக்கும், தை மாதத்தில் பொங்கல்விழா என்று காற்றுக்கு அடிப்படையான ஞாயிற்றுக்கும், சித்திரை மாதத்தில் இந்திரவிழா என்று நீர்வளத்திற்கு அடிப்படையான மன்னனுக்கும், நிலத்திற்கு அடிப்படையான முல்லைத்திணை இருத்தலும் இருத்தல் நிமித்தமும் என்பதானது என்கிற நிலையில், குடும்ப விழாக்கள் அனைத்தும் நிலம் கொண்டாடும் விழாக்கள் பல்வேறு மாதங்களிலும் ஆக இறைக்கூறு தெய்வங்களுக்கு ஆண்டுக்கு ஒருமுறை விழா எடுப்பதும்,
தமிழர் முன்னெடுக்கும் அத்தனை விழாக்களிலும் காப்புக்கட்டு என்று கடவுள்கூறு தெய்வத்திடம் மந்திரம் ஆற்றுவதும் தமிழ்முன்னோர் வகுத்த தமிழியல் நடைமுறைகள் ஆகும்.
நாற்திர ஆற்றல்களின் பல்வேறு கூட்டியக்கங்களான கோள்கள் விண்மீன்களை அடுத்து புவிக்கோளில் தன்விருப்பத்திற்கு இயங்கும் உயிரிகள் தோற்றம் பெறுகின்றன. தன்விருப்பத்திற்கு இயங்குகிற காரணம் பற்றி அவைகளுக்கு காலககெடுவும் ஒரு இயல்பாக அமைகிறது.
அவற்றில் பண்பியக்கம் மட்டுமே அமைந்த தாவரங்கள் ஒருவகை. பயண இயக்கமும் அமைந்த விலங்குகளும் மனிதனும் மற்றொரு வகை.
அவற்றுக்கு அமைந்த புலன்கள், புலன்களின் எண்ணிக்கை அடிப்படையில் அவைகளை ஆறாக வகைபடுத்துகின்றனர் தமிழ்முன்னோர்.
தாவரங்களும் விலங்குகளும் செயலாளும், புலன்அறிவாலும் கடவுளை இயக்கி அந்த வகைக்கு கடவுளிடம் இருந்து முயக்கம் பெறுகின்றன.
ஆறாவது அறிவினான மனிதன் செயல், எண்ணம், மொழி ஆகிய மூன்றாலும் கடவுளை இயக்கி அந்த வகைக்கு கடவுளிடம் இருந்து முயக்கம் பெறுகின்றான்.
மனிதன் மொழியால் தன் தேவைகள் எதுவானாலும் கடவுளிடம் கேட்டும் பெறமுடியும் என்பதைத் தமிழ்முன்னோர் தெளிவாக நிறுவியுள்ளனர். அந்த வகைக்கு தமிழ்முன்னோர் முன்னெடுத்த முன்னேற்றக்கலை மந்திரம் மூன்றாவதாக முன்னெடுத்தது ஆகும்.
இன்றைக்கு உலகினருக்குக் கிடைத்திருக்கிற கணினி வரையிலான அனைத்தும் கடவுளிடம் கேட்டதால் கிடைத்தது ஆகும். என்பதை மந்திரத்தின் மூலம் தெளிவாகப் புரிந்து கொள்ளலாம்.
உலகினரில் வெற்றியாளர்கள் பலரும், இயல்பூக்கமாக தன் மொழியால், கடவுளிடம் கேட்டுப் பெற்றவர்கள் ஆவார்கள்.
மனிதன் பல்வேறு மொழிகளோடு தனித்தனிக் கூட்டமாக இயங்குவதால்,
மனிதர்களை அவர்கள் கொண்டாடும் மொழி அடிப்படையில் வகைபடுத்தியும் வரிசைப்படுத்தியும் புரிந்து கொண்டு முயக்குகிறது கடவுள்.
கடவுளுக்கு மனிதனின் பெயரை முதன்மையான அடையாளமாக உலக இனங்கள் அனைத்தும் இயக்கம் கொடுத்துள்ளன.
ஒரு தமிழன், தனக்கு சமஸ்கிருதத்தில் பெயரை அமைத்துக் கொண்டு, கடவுளிடம் வேண்டும் போது, அவனை சம்ஸ்கிருத மொழியினர் வரிசையில் இருத்தி அவனுக்கான பலனை கடவுள் ஒருங்கிணைத்துத் தருகிறது.
சமஸ்கிருதம் தன்மொழியில் பெயர் கொண்டிருக்கிற அயலவன் தனது அடிமை என்கிற பதிவைக் கடவுளுக்குக் கொடுத்திருப்பதால், அந்த தமிழனுக்கான பலன் ஒரு அடிமைக்கான பலனாக மட்டுமே கடவுளால் கொடுக்கப்பட முடியும்.
எடுத்துக்காட்டாக தமிழில் பெயர் சூட்டிக் கொண்டுள்ள ஒரு தமிழனுக்கு சொந்தவீடு எளிதாக அமைந்து விடுகிறது. ஆனால் சமஸ்கிருதத்தில் பெயர்சூட்டிக் கொண்டுள்ள தமிழனுக்கு சொந்த வீடு அமைவது அவ்வளவு எளிதானது அல்ல.
மனிதனில் கடவுள் உருவாவது எப்போது?
பெண்ணின் கருமுட்டையாக இருக்கிற உயிரியிலோ, ஆணின் விந்தாக இருக்கிற உயிரியிலோ இடம் கடந்து மட்டுமே அமைவதால் அங்கே கடவுள் உருவாவது இல்லை.
பெண்ணின் கருமுட்டையை ஆணின் விந்தணு துளைத்த உடனேயே அந்தக் குழந்தை கடவுளில் இயங்கவும், அந்தக் குழந்தைக்குக் கடவுள் முயக்கமும் தொடங்குகிறது.
பிறக்கும் குழந்தைகள் அனைத்தும் பெற்றோரின் வழிகாட்டுதலுக்கு முந்தைய நிலைவரை, கடவுளிடம் தன் சொந்த இயக்கத்திற்கான, கடவுள்முயக்கம் கொண்டாதாகவே வளர்ந்து வருகின்றன.
அதனால்தான் விரைவாகப் பேசவும், நடக்கவும் மிக எளிதாகக் கற்க முடிகிறது.
ஒவ்வொரு மனிதனின் சொந்த இயக்கத்திற்கான கடவுளின்முயக்கம்- அவனது சொந்தமொழிப் பெயர், அவன் ஒப்புக்கொடுக்கும் சொந்த இயல், அவன் கொண்டாடும் சொந்த மொழி சார்ந்து அமைகிறது.
ஒவ்வொரு மனிதனின் சொந்த இயக்கத்திற்கான கடவுளின்முயக்கத்தால் பிந்தை ஏழுதலைமுறையும் அவனுக்கான பலன் தொடர்ந்து வரும்.
கருத்துகள்
கருத்துரையிடுக