கிழமைகள் தமிழ்முன்னோர் உலகிற்கு அளித்த கொடை


கிழமைகள் தமிழ்முன்னோர் உலகிற்கு அளித்த கொடையானது எப்படி? என்று வேறு ஒரு களத்தில் கேட்கப்பட்டிருந்த வினாவிற்கு, விடையளிக்க உருவாக்கப்பட்டது இந்தக் கட்டுரை. 

இமயத்தில் தோன்றிய மனிதஇனத்திற்கு கிடைத்த இரண்டு நிலப்பகுதிகளில்- ஒன்று, இமயத்தின் இடமாக அமைந்த ஆசியா, ஐரோப்பா, ஆப்பிரிக்க, என்கிற மிகப் பெரும் பகுதி. 

அந்தப் பெரும்பகுதியினரின் வாழ்க்கை நிலையானதாக அமையாத பேரளவு பயணமாகிய காரணம் பற்றி- சில குழுவோடு சில குழுக்கள் மீண்டும் மீண்டும் மோத வேண்டியிருந்த வகையில், அவர்களுக்குக் கிடைத்த கோட்பாடுகள் பாகுபாடும் முரண்பாடும் ஆகும். அவற்றிலேயே உலகம் இன்றுவரை பயணித்து வருகிறது.

இமயத்தில் தோன்றிய மனிதஇனத்திற்கு கிடைத்த இரண்டு நிலப்பகுதிகளில் இமயத்தின் வலமாக அமைந்த தேயம் என்கிற பொருளில் பெயர் சூட்டப்பட்டிருந்த, இன்று மறுவி இந்தியா என்று அழைக்கப்படுகிற நாவலந்தேயம் என்னும் முப்புறம் கடல் அமைந்த சிறு பகுதி மற்றொன்று. 

அவர்களுடைய நிலைத்த வாழ்க்கை அவர்களுக்கு வழங்கிய கோட்பாடு, வகைபாடு என்கிற இருவேறு உலகத்து இயற்கை என்கிற நடுநிலைமைப்பாடு ஆகும்.

அதனால் அவர்களுக்கு இயல்மொழியான தமிழும், இயற்கையை ஒட்டிய ஐந்திணை வாழ்க்கையும் கிடைத்தன. 

மலையும் மலை சார்ந்த இடமும் என்கிற குறிஞ்சி நிலத்தில் (இமயத்தில்) தோன்றிய தமிழ்முன்னோர், அடுத்து பரவியது காடும் காடு சார்ந்த இடமான முல்லை. 

அடுத்து காட்டின் வழியாக ஓடிய ஆற்றோடு தொடங்கிய தேடலில் மருத நிலத்தை உருவாக்கினர் தமிழ்முன்னோர். 

மருத நிலத்தை உருவாக்கும் போதுதான் அவர்களுக்கு கருவியியல் அறிவும் வானியல் அறிவும் பேரளவாகத் தேவைப்பட்டன. அதைப்

பொய் அகல நாளும் புகழ் விளைத்தல் என் வியப்பாம்?

வையகம் போர்த்த, வயங்கு ஒலி நீர் - கையகலக்

கல் தோன்றி, மண் தோன்றாக் காலத்தே, வாளோடு

முன் தோன்றி மூத்த குடி! 

என்று பேசுகிறது புறப்பொருள் வெண்பாமாலை என்கிற புறப்பொருள் இலக்கண நூல்.

குறிஞ்சி வாழ்க்கை தோன்றி மருத வாழ்க்கை தோன்றாக் காலத்து, மருத வாழ்க்கைக்குப் பேரளவு வாள்கள் தேவைப்பட்டன. அத்தனை வாள்களையும் தோற்றுவித்து விட்டனர் தமிழ்முன்னோர் என்பதுதான் இந்தப்பாடல் கொண்டாடும் செய்தியாகும்.

அந்த வாள்களில் ஒன்று அரைவட்டமாக வடிவமைக்கப்பட்ட கருக்கரிவாள். 

இந்தக் கருக்கரிவாள் வானியலிலும் முன்னெடுக்கப்பட்டது ஏழாவது கிழமைக்குப் பெயராக.

இந்தக் கருக்கரிவாள் கிழமை உலகினருக்கு கொடையாக்கப்பட்ட போது அந்தக் கோளை வேளாண்மைக்கான கோள் என்று நிறுவிக் கொண்டனர் உலகினர்.

நடப்புத் தமிழ்த்தொடராண்டு 5125. 

ஐயாயிரத்து நூற்று இருபத்தைந்து ஆ;ண்டுகளுக்கு முன்பே தமிழ்முன்னோர் வானியலில் நிறைவான செய்திகளை நிறுவியிருந்தனர். 

1. ஓர் ஆண்டுக்கான கால அளவு 365 நாட்கள். 15 நாழிகை 31 விநாழிகை 15 தற்பரை என்ற தகவலை உலகிற்கு கொடையாக்கினர் தமிழ்முன்னோர்.

2. ஞாயிற்றுக் கோளை குறிப்பிடும் ஞாயிற்றுக் கிழமை, நிலாவைக் குறிப்பிடும் திங்கட் கிழமை, சிவந்த கோளான செவ்வாயைக் குறிப்பிடும் செவ்வாய்க் கிழமை, அடுத்து புதியதாக கண்டறியப்பட்ட கேளான புதியம் கோளைக் குறிப்பிடும் புதியம் கிழமை. மிகப் பெரிய கோளாகக் கண்டறிந்த வியாழம் கோளைக் குறிப்பிடும் வியாழம் கிழமை, ஞாயிற்றுக்கு முன்பாகவே விடியலில் ஒளிரும் கோளான வெள்ளிக் கிழமை, கதிரை அறுக்கப் பயன்படும் கருக்கரிவளைப் போன்ற வட்டத்தை வெளிப்புறமாகக் கொண்ட கருக்கரிவாள் கோளைக் குறிப்பிடும் கருக்கரிவாள் கிழமை என்று ஏழு கிழமைகளையும் உலகிற்கு கொடையாக்கினர் தமிழ்முன்னோர்.

அதே அடிப்படையில் ஒட்டுமொத்த உலகமும் கிழமைகளுக்கு பெயர் சூட்டி கொண்டாடி வருகின்றனர்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கடவுள்! எங்கே, எப்போது, ஏன், உருவாகிறது? இயல்கணக்கில் தமிழியல் தெளிவுபடுத்துவது என்ன

குடும்பம் தமிழர்களுக்குச் சொந்தமானது. கூட்டுக் குடும்பம் அல்ல

மறுபிறப்பு