பல நூறு தமிழ்ச் சொற்களின் வரையறைகள் வரிசையில்- ஐந்திரம்!
நிறைய தமிழ்ச் சொற்களை, அதன் பொருள் பொதிந்த வரையறைகளை, பிராமணியம், ஐரோப்பியம், மார்க்சியம், வேறுவேறு மதங்கள் என்று பல்வேறு அயல்சார்புகளில் மலைப்புகளில், தொலைத்து விட்டு, நாம் நீர்த்துப் போன வடிவங்களாக அச்சொற்களைக் கையாண்டு வருகிறோம். ஒவ்வொரு சொல்லாக வரையறை மீட்பதற்கானது இந்தக் கட்டுரை 'ஐந்திரம்' என்ற சொல்லின் வரையறையை இந்தக் கட்டுரையில் முன்னெடுத்துள்ளேன். ஐந்திரம்: தமிழில் 'ஐந்திரம்;' என்று வழங்கப்படுகிற சொல் நிலம், நீர், தீ, காற்று, விசும்பு என்கிற திரண்ட ஆற்றல்களுக்கான பொதுச் சொல் ஆகும். தமிழில் உள்ள பெரிய என்ற ஒப்பீட்டுச் சொல்லை வியந்த பிராமணியர்கள் அதை பிர என்று சமஸ்கிருதத்தில் ஒலிமாற்றம் செய்து, உயர்த்திப் பிடிக்கும் வகைமைகளுக்கான பிரபலம், பிரமாண்டம், பிரசாதம், பிரணவம், பிரதமர், போன்ற நிறைய சொற்களை சமஸ்கிருத்ததில் உருவாக்கிக் கொண்டார்கள். அந்த வகையில் தமிழன் கண்ட ஐந்திரத்திற்கும் ஒரு சொல்லை உருவாக்கினார்கள். அந்தச் சொல்தான் பிரபஞ்சம். இதற்குப் பெரிய ஐந்து என்று பொருள். அவர்கள் மொழிமாற்றிய பிரபஞ்சம் என்ற சொல்- நிலம், நீர், தீ, காற்று, விசும்பு என்கிற ஐந்திர ஆற்ற