இடுகைகள்

மே, 2025 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

தமிழ்மொழி போற்றுதலே! திருக்குறளின் முதலாவது அதிகாரம்

படம்
திருக்குறளின் முதலாவது அதிகாரம், கடவுள்கூறு தெய்வமாக தமிழ்முன்னோர் கொண்டாடி இருந்த, தமிழைப் போற்றுவதற்கானதே என்று தெளிவுபடுத்துவதற்கு உருவாக்கப்பட்டது இந்தக் கட்டுரை. குறள் 1: அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு  இது திருவள்ளுவரின் முதல் குறள். அதாவது:- அகர முதற்றே எழுத்தெல்லாம். ஆதிபகவன் முதற்றே உலகெல்லாம் உல் என்றால் வட்டம். அதனால் தமிழ்முன்னோர் நமது புவியை மட்டுமல்லாமல்- வட்டமான கோள்களை எல்லாம் உலகம் என்றே குறிப்பிட்டனர். அந்த வகையாக ஏழுகோள்களை தமிழர் ஏழுலகம் என்று சொல்ல, ஏழுலகத்திற்கு பிராமணர் வேறு பொருள் கற்பிக்கப் போய், இன்றைக்கு ஏழு உலகம் வேறாகவும் ஏழு கோள்கள் வேறாகவும் பார்க்கப்படுகிறது. எழுத்துக்களுக்கு அகரம் முதல். கோள்களுக்கு ஞாயிறு (ஆதிபகவன்) முதல். இந்தக் குறளில் திருவள்ளுவர் போற்ற வந்தது அகரத்தை.  ஆனால் திருவள்ளுவர் போற்ற வந்தது, ஏதோவொரு தெய்வத்தை என்று தெரிவித்து, பல ஆயிரம் ஆண்டுகளாக பொருள் சொல்லிக் கொண்டு வருகின்றனர் வெறுமனே கருத்துப் பரிமாற்றக் கருவியாகத் தமிழைப் படித்தவர்கள். குறள் 2: கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன் நற்றாள் தொழாஅர் எனின் கல்வி என்ற...