இடுகைகள்

ஜூலை, 2024 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

தமிழ்நாட்டின் கல்விப்பாட்டு முயற்சிக்கு ஒரு கேட்பு மந்திரம்.

படம்
தமிழர் கொண்டாடி இருக்க வேண்டிய சீரிய வாழ்மானத்திற்கான கல்வி குறித்தும், நடப்பில் பேரளவு தமிழர் முன்னெடுத்து வரும்  சீரற்ற பிழைப்பிற்கான நிர்வாகம் குறித்தும் பேசுவதற்கனாது இந்தக் கட்டுரை. காட்டிற்குள் பிறக்கிற ஒரு நாய்க்குட்டி தாயுடனும் உடன் விலங்குகளுடனும் ஓடியாடிக் கற்பது சீரிய வாழ்மானத்திற்கான கல்வியாகும். வீட்டில் வளர்கிற ஒரு நாய்க்குட்டி உரிமையாளருடனும், உரிமையாளரின் தலைவி பிள்ளைகளுடனும், உரிமையாளரின் சொந்த பந்தங்கள் நட்புக்களுடனும், வெளியாட்களுடனும் அது நடந்து கொள்ள வேண்டிய முறைகளை உரிமையாளின் மொழியில் பயில்வது சீரற்ற பிழைப்பிற்கான  நிர்வாகமாகும். ஒரு தமிழ்ப்பிள்ளை தாயின் மடியிலும், தந்தையின் தோளிலும், அண்ணன் அக்காவின் கைகளிலும், அண்டை அயலாரின் தொடர்புகளிலும், பள்ளியில் தமிழ்வழிக் கல்வியிலும் கற்பது சீரிய வாழ்மானத்திற்கான கல்வியாகும். அந்தப் பிள்ளையால் தனித்திறனிலோ, வேளாண்மையிலோ, தொழிலிலோ, வணிகத்திலோ சிறக்க முடியும். அந்தப் பிள்ளை உடலுழைப்புக் கூலித்தளத்திற்கான அல்லது நிர்வாகக் கூலித்தளத்திற்கான வேலையை விரும்பாது. ஒரு தமிழ்ப்பிள்ளை மம்மி, டாடி, பிரதர், சிஸ்டர், ஆண்டி அங்கிள் என்கி